Wednesday, 14 September, 2022

நினைவுகள்

என் நினைவாக உன்னிடத்தில்

என்ன இருக்கின்றது 

என்று கேட்கின்றாய்...

புன்னகைத்துக் கொண்டே 

நினைத்துப் பார்க்கின்றேன்...

 உன் நினைவுகளை....

Monday, 12 September, 2022

காதல் பூகம்பம்

இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாயா நீ.... 

பூகம்பத்திற்குள் சிக்கி 

மூச்சு விட தவிக்கும் 

மதிகெட்டவனைப் போல

ஆனது எனது நெஞ்சம்

 உன்னைத் தொட்டதிலிருந்து....

Wednesday, 19 March, 2014

உன்னை புரிந்துகொள்வது எப்படி



உன்னை புரிந்துகொள்வது எப்படி . . .
ஊமை விழிகள் என்று . . .
உன் கண்களுக்கு ஏன்
பெயர் வைத்தார்கள் . . .
உண்மை தான்
உன் கண்களை ஊமையாக்கிவிட்டு
என் கண்களை அழவைகின்றாயே . . .

Saturday, 7 September, 2013

உன் நினைவில்

நீ கண்ணுரங்கிக் கொண்டிருக்கின்றாய்
நான் உன்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கின்றேன். . .
ஏப்பாடியாவது ஏதோ நினைத்து
என்னைக் கொன்றுவிடு. . .ஏனெனில்
உரக்கத்தில் கூட உன் பிரிவை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால். . .

Monday, 28 May, 2012

பைத்தியக்காரன். . .



என்னை பைத்தியமாக்கி ரசிப்பதில்
அவ்வளவு சந்தோசம் அவளுக்கு
அவள் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும்
புத்தி சுவாதினம் அற்றவனாகிப்போகின்றேன். . .

Wednesday, 7 March, 2012

காதல் ஹார்மோன்



கவிதை கூட காதலினால்
சுரக்கப்படும் ஒருவகை ஹார்மோன் தான். . .
அந்த காதலும் கூட
உன் கண்களைப் பார்த்த பின்பு தானடி
சுரந்தது என்னுள். . .

Wednesday, 15 February, 2012

காதல் காலங்கள் கடந்தது. . .

காதல் பூப்பதும் இல்லை
காதல் உதிர்வதும் இல்லை
காதல் முளைப்பது. . .

நொடிப் பொழுதில்
உருவாகி பின் மறைவது
காதல் ஆகாது. . .
காதல் காலங்கள் கடந்தது. . .