Tuesday, 15 November 2011

உன்னைப் பிடிக்கும்

நீ எனக்கு
என்ன தண்டனை வேண்டுமானாலும்
கொடுத்துக்கொள். . .
உன்னை எனக்கு பிடிக்கும்
என்பதை - உன்னிடம்,
உன்னை எனக்குப் பிடிக்கும்
என்று சொல்வதைவிட
வேறு எப்படி என்னால்
சொல்ல முடியும். . .

8 comments:

Yaathoramani.blogspot.com said...

உங்கள் கவிதைகள் உணர்வுப் பூர்ணமானவை
எனக்கு ரொம்பப் பிடிக்குமம்
ஆயினும் எல்லா கவிதைகளும்
காதலியை வலுக்கட்டாயமாக
காதலிக்க வற்புறுத்துவதைப் போலவே
அமைந்துவிடுகிறது மட்டும் ஏன் எனப் புரியவில்லை
அல்லது நான்தான் சரியாகப் புரிந்து கொள்ள்ளவில்லையா

K.s.s.Rajh said...

////உன்னை எனக்கு பிடிக்கும்
என்பதை - உன்னிடம்,
உன்னை எனக்குப் பிடிக்கும்
என்று சொல்வதைவிட
வேறு எப்படி என்னால்
சொல்ல முடியும். . .////

அருமை அருமை......

நிரூபன் said...

வணக்கம் சகோ,
நலமா?

அவள் மீதான அன்பினை அவளிடம் தானே சொல்ல முடியும் என்பதனை கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது!

சக்தி கல்வி மையம் said...

நாளே வரியில் ....

அசத்தல்..

பிரணவன் said...

சில கவிதைகள் அப்படி அமைந்திருந்திருக்கலாம் sir, காதலில், காதலை வெளிப்படுத்துவது தான் மிகவும் சிரமம், பிறகு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது அதனினும் சிரமம். என்னை பொருத்தவரை காதல் முக்கியம் இல்லை காதலி தான் முக்கியம். . . அதுக்காக நான் இப்ப யாரையும் காதலிக்கின்றேன் என்று அர்த்தம் இல்லை. . .வாழ்த்துக்களுக்கு நன்றி sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .காதல இப்படியும் சொல்லலாம்னு நினைச்சேன். அதான். . .

பிரணவன் said...

நிரூபன் சகா நான் நலம், வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .

பிரணவன் said...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .