Friday, 13 May 2011

முக்தி



பட்டுப்பூச்சிகள் கூட்டை
உடைத்து பறப்பதைவிட. . .
உன் பட்டுச்சேலைக்கு
நூல் கொடுக்கவே
காத்துக்கொண்டிருக்கின்றன
தன் மரணத்திற்காக. . .

Monday, 9 May 2011

செல்லமே


என்றுமே எனக்கு
நீ குழந்தை. . .
நான் சாகும் வரை
உன்னைச் சுமந்துகொண்டிருப்பேன்
என் மனதில். . .

Friday, 6 May 2011

ஏக்கம்





இரவுகளில் உன்னை
காணமுடியாமல்
இறுதியில் கருகிவிட்டது
நிலா. . .
அன்றுதான் அம்மாவாசை. . .

Thursday, 5 May 2011

முழுமை



இரவில் ஒருநாள்
உன்னை
வீதியில் கண்டது
நிலா. . .
அன்றுதான் 
அதற்கு
பௌர்ணமி. . .

Tuesday, 3 May 2011

பிறை



தினமும் தேய்கின்றது
நிலா. . .
இரவில் உன்னைப்
பார்க்கமுடியாமல். . .

Monday, 2 May 2011

தவம்



தினமும் பன்னிரண்டு
மணிநேரம் தவமிருக்கின்றது
சூரியன். . .
அதிகாலையில் உன்
கண்விழிப்பிற்காக. . .

Sunday, 1 May 2011

பிரிவில் சுகம்


உன்னைப் பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகளாலும் தான்
வலுப்பெருகின்றன . . .