Sunday, 18 September 2011

காதல் பரிசு

உன்னை என் மார்புமேல் படுக்கவைத்து
உன் தலை கோதி
உறக்கத்தின் தேவதையை பரிசாக
உனக்களிக்க ஆசை எனக்கு. . .
இப்படியான பல எதிர்பார்ப்புகளுடன்
நான் உறங்கக் கிடக்கையில்
என் உறக்கத்தின் தேவதையை
பரிசாய் எடுத்துக்கொண்டவள் நீ. . .
                                                      அன்பே அது தான் நீ
                                                      எனக்குத் தந்த காதல் பரிசு. . .

16 comments:

K.s.s.Rajh said...

அருமையான பரிசு..வாழ்த்துக்கள்

கோகுல் said...

ரசனையா சிந்தனை!வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

சற்றே நீளமான கவிதை.உறக்கத்தைத் தொலைத்தவரைத் தெரிகிறது. உறக்கத்தைத் திருடியது யார்?!

K said...

வித்தியாசமான அழகான காதல் பரிசு!கவிதை அருமை!

Yaathoramani.blogspot.com said...

தங்கள் சிந்தனைச் செறிவும்
சொற்களைப் பயன்படுத்தும்
லாவகமும் மனம் மயக்கிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

அழகான சிந்தனை

மாலதி said...

நல்ல கற்பனை நயம் சொக்கவைக்கும் எழுத்து நடை சிறப்பான ஆக்கம் உளம் நிறைந்த பாராட்டுகள்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

ரசித்தமைக்கு நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

அவளைத் தான் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், எங்கோ போய் ஒழிந்துகொண்டால் என் மனதில். . .வாழ்த்துரைக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ஐடியா மணி சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ரமணி sir. தங்களின் மேலான ஆதரவுடன் என் படைப்புகள் தொடரும். . .

பிரணவன் said...

நன்றி சதிஷ் சகா. . .

பிரணவன் said...

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி மாலதி mam. . .

நிரூபன் said...

அவளை உறங்கச் செய்ய நினைக்கையில், அவள் உங்களின் உறக்கத்தினைக் களவாடி விட்டாளா..

இனிமையான காதல் பொழுதுகளைச் சொல்லி நிற்கிறது கவிதை,

ம.தி.சுதா said...

மிகவும் நுட்பமான கோர்ப்பு...

சகோதரா தாங்கள் தனிய கவிதை மட்டும் தான் எழுதி வருகிறீர்கள் ஆனால் அதற்கேற்றால் போல் தளத்தை வடிவமைக்கலாமே...

தங்களின் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது..