Saturday 8 October, 2011

என்றும் என் நினைவில்

என் இதயம் சுமந்தவளே
எனக்காய் அழுதவளே
இன்னல் பல இருந்தும்
என் எண்ணம் புரிஞ்சவளே. . .

மனசு கனக்குதடி
மதிகலங்கி சுத்துதடி
உசிரு துடிக்குதடி - தினம்
உன்னினைவாலே சாகுதடி. . .

மாய வலை விரிச்சு
மரகதமே உன்ன கொண்டுசெல்ல
ஒத்தக்கல்லு கோபுரமாய் நானும்
ஒடஞ்சு போய் நின்னேன்டி. . .

மனுசனா என்ன மாத்தியவளே
மனசுன்னா என்னானு காட்டியவளே
காலம் மாத்திப் போனாலும் - என்
காதல் மாறிப் போகாதடி. . .

13 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனதை அப்படியே மிக அழகாய்
விரித்துப் போடும் அற்புதக் கவிதை
மன நிறைவைத் தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கோகுல் said...

நிறையப்பேருக்கு உள்ளே இருக்கும் மனுசத்தையும்,மனசையும் காதல்தான் வெளிக்காட்டுகிறது,
உண்மையான வரிகள்!

அப்பறம்!பிரணவன் வலைக்கு வருவதற்கு பதில் வேற எங்காவது வந்திட்டனா?

நாலு வரிய தாண்டிட்டிங்க!

ஹா ஹா! சும்மாச்!
கலக்குங்க!

K.s.s.Rajh said...

கோகுல் கேட்டது போல இன்னைக்கு என்ன கவிதை நாலுவரியை தாண்டிட்டு இதுவும் சூப்ப்பரா இருக்கு தனியே குறுங்கவிதைகள் மட்டும் எழுதாமல் இப்படியும் சில கவிதைகள் எழுதுங்கள் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பாஸ்

பிரணவன் said...

வாழ்க்கை ஓட்டத்தில் காதலும் ஒரு வழி (வலி). . .நன்றி ரமணி sir. . .

Unknown said...

கவிதையும் அருமை படமும் அருமை

பிரணவன் said...

கோகுல் சகா இது என்னுடைய 75 வது பதிவு அதுனால தான், கொஞம் பெரிதா. . .நன்றி சகா. . .

பிரணவன் said...

ராஜ் சகா, இப்படியும் எழுதுவேன் இருந்தாலும் காதலை நச்சுனு சொல்லனும்னு நினைப்பேன் அதான் நாலு வரி. . .நன்றி சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ் சகா. . .

ஸ்ரீராம். said...

அருமை. எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

///ஒத்தக்கல்லு கோபுரமா////

இந்த உவமிப்பு ரொம்பவே கவர்ந்திருக்கு...

அருமைங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ ராம் சகா.

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி மதி சுதா சகா.

Unknown said...

///மனுசனா என்ன மாத்தியவளே
மனசுன்னா என்னானு காட்டியவளே
காலம் மாத்திப் போனாலும் - என்
காதல் மாறிப் போகாதடி. . .///

"காதல் செய்த மாயம்"
கவிதை நன்று ...

சகோதிரி சாகம்பரி ஆற்றுபடுத்தியதால் இவ்விடம் வந்தேன்... நன்றி!