Thursday, 30 June, 2011

புவி நட்சத்திரம்`


நட்சத்திரங்களை நான்
காலையிலும் பார்க்கின்றேன்
அன்பே 
உன் கண்களில் தான்
எவ்வளவு வெளிச்சம். . .

Tuesday, 28 June, 2011

காதலன் ஆகிறேன்

நான் காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன். . .
கவிதை எழுதுவதால் அல்ல. . .
உன் கண்கள்
சொல்லும் வார்த்தைகளை
படிக்க கற்றுக்கொண்டதால். . .

Sunday, 26 June, 2011

அலையின் ஏக்கம்உன் பாதங்களை
தொட்டுச் செல்லும்
கடல் அலைகள்
கண்ணீர்விடுகின்றன. . .
இந்த மண்னைப் போல
உன் பாதங்களை
எப்பொழுதும் தழுவ
முடியவில்லையே என்று. . .

Friday, 24 June, 2011

எனக்கேசிரித்தும் கேட்டுவிடாதே
அழுதும் கேட்டுவிடாதே
அவள் அழகை. . .
நிலவே
அவளின் அனைத்தும்
எனக்கு மட்டுமே
சொந்தம். . .

Wednesday, 22 June, 2011

மறவாதே கண்மணியேநீ வாசல் காதவுகளை
மூடியதற்கே வழிமாறி
நடக்கின்றேன் நான். . .
தயவுசெய்து உன்
இதயக் கதவுகளையும்
இதைப்போல் மூடிவிடாதே
கல்லறையில் போய்
ஒழிந்துகொள்வேன் நான். . .  

Monday, 20 June, 2011

காதல் வீதிஎனக்குப் பிடித்தவற்றை
எல்லாம் கடையில்
வாங்கிவிடுகின்றேன். . .
காதலும் விற்பனை
பொருளாக இருந்திருந்தால்
நான் தற்கொலைக்கு
முயற்சி செய்திருக்கமாட்டேன். . .

Saturday, 18 June, 2011

நீயே. . .உணர்வுகளில்
காதலை பிடிக்கும். . .
உறவுகளில்
காதலியாய்
உன்னை மட்டுமே
பிடிக்கும். . .

Thursday, 16 June, 2011

கண்ணுறங்கும் வெண்நிலவு

நீ கண்விழித்திருக்கும் போது
உன்னை ரசித்ததைவிட. . .
நீ உரங்கும் வேலையிலேயே
அதிகம் உன்னை ரசிக்கிறேன். . .
பஞ்சு மெத்தையில் கண்ணுறங்கும்
வெண்நிலவாய் நீ. . .

Tuesday, 14 June, 2011

கண்ணாடிக் கனவுகள்

என்னை உறங்கச்சொல்கிறார்கள்
எப்படி உறங்க.?
உடைந்த உன்
கண்ணாடிக் கனவுகள்
என் கண்குத்தும் போது. . .

Sunday, 12 June, 2011

கலவரப் பகுதிஅவள் கண்களின் தாக்குதலால்
என் இதயத்தில் அடிக்கடி
சேதம் ஏற்ப்பட்டுவிடுகின்றது. . .
என் இதயத்தையும் அறிவியுங்கள்
கலவரப் பகுதியாக. . .

Friday, 10 June, 2011

நின்றேன்

உன்னை மறந்து
ஓடிய நாட்களைவிட. . .
நீ இல்லாமல்
நின்று போன
கடிகார முட்களின்
நிலை தான்
எனக்கு. . .

Wednesday, 8 June, 2011

உன்னைத் தேடிகடவுளுக்கு பதிலாக
உன்னைத் தேர்ந்தெடுத்தேன்
என் மனச்சோகங்களை
உன்னிடம் பகிர்ந்துகொள்ள. . .
நீயும் இப்பொழுது
பேசமறுக்கிறாய் என்னிடம். . .
இருந்தபோதும் சொல்லி
அழுகிறேன் சோகங்களை. . .
கடவுளும் பேசுவதில்லை
நீயும் பேசுவதில்லை. . .
கதறி அழுகிறேன்
நான் மட்டும். . .
கைஉதறிவிட்டு போன
உன்னைத் தேடி. . .

Tuesday, 7 June, 2011

காத்திருக்கிறேன்உனக்காக காத்திருப்பது
என் கால்கள் மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்
வந்துவிடு வேகமாக
காத்திருக்கிறேன் உன்
நினைவுகளால். . .

Monday, 6 June, 2011

கவிதையேசிந்தித்தால் தான் கவிதைவரும்
என்கின்றார்கள் . . .
உன்னைப் பற்றி பேசினாலே
கவிதையாகத்தானே
இருக்கின்றது. . .15/2/2011

Sunday, 5 June, 2011

நீயே அழகுஉன்னை விட
தன்னை அழகாய்
காட்டிக்கொள்வதற்காக
பாவம் நிலா
படாத பாடு படுகின்றது
பௌர்ணமியன்று. . .

Saturday, 4 June, 2011

நீயே காதல்தேடலின் முடிவில் தான்
காதல். . .
ஆம் நான் தேடியது
உன்னை. . .
முதலும் நீயே. . .
முடிவும் நீயே. . .

Friday, 3 June, 2011

காதல் வெளி

காதல் பிறந்த காலத்தில்
என் இதயம் தொட்டு
பறந்த பட்டாம் பூச்சிகளை
மட்டும் சிறைபிடிக்கவே
விரும்பவில்லை என் மனது. . .
இன்று அவைகள்
என் நினைவெல்லைகளின்
பயண தூரங்களை கடந்து
காதல் வெளியில்
சிறகடித்துச் செல்கின்றன. . .

Thursday, 2 June, 2011

புனிதன்

அவள் உன்னை தூக்கியெறிந்த பிறகும்
எதற்காக இன்னும் அவளுக்காகவே
துடிக்கின்றாய் - நீ மனிதன் தானா? - என்று
எதிர்மறை எண்ணங்கள்
என்னை கேள்விகேட்கின்றன. . .
பாவம் அவைகளுக்கு
எப்படித் தெரியும் நான்
உன்னை காதலிக்க தொடங்கிய
நாள் முதலே புனிதன்
ஆகிவிட்டேன் என்று. . . 

Wednesday, 1 June, 2011

நீ தந்த கவிதைஉன்னை காதலிக்க
தொடங்கிய நாள்முதல்
கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன் என்றேன். . .
காரணம் கேட்கின்றாய். . .
நான் எழுதிய
ஒவ்வொரு வரிகளும் - நீ
பேசிய வார்த்தைகள்தானே. . .