Saturday 24 December 2011

என்னை அறிந்தவள்

உன்னை காதலிக்கவும் வைக்கின்றாய்
சில நேரங்களில் உன்னை
வெருக்கவைக்கவும் செய்கின்றாய். . .
உன்னை கேள்வி கேட்பதுமுறையல்ல. . .
என்னை ஆட்டுவிக்கும் வித்தையை
எப்படித்தான் கற்றுக்கொண்டாயோ. . .

Tuesday 20 December 2011

என் சுவாசமே

காற்றை சுவாசிக்கின்றேனா?
காதலைச் சுவாசிக்கின்றேனா?
நீ நடந்து சென்ற
தெருவெங்கும்
உன் சுவாசமே
நிரம்பியிருக்கின்றன. . .

Thursday 15 December 2011

பிரிவிலும் காதல்உன்னிடம் சண்டையிட்டு
பிரியும் ஒவ்வொருமுறையும்
உன்னை காதலிக்கத் தொடங்கிய
அந்த முதல் நாளிற்கு சென்றுவிடுவேன். . .
உன்னை ஒவ்வொருமுறை
காதலிக்கும் போதும்
புதியதாகவே தெரிகின்றது
காதல். . .

Saturday 10 December 2011

வித்தை சொல்லடிஉன்னை எப்படி நான்
கடத்திச் செல்வது. . .
உன் நிழலையே
கடந்து செல்ல துணிவு இல்லாத
என் மனதுக்கு. . .
எப்படிக் கற்றுக்கொடுப்பேன்
உன்னை தூக்கிச்செல்லும் வித்தையை. . .

Monday 5 December 2011

எப்படிச் சொல்வேன்

என் இதயம்
தீ பற்றி எரிகிறது. . .
உன்னைக் கேட்டு. . .
அதனிடம் எப்படிச் சொல்வேன்
எரிகின்ற நெருப்பில்
எண்ணெய் ஊற்றுவதே
நீ தான் என்று. . .

Wednesday 30 November 2011

காதலன்

யாவரும் இருக்கும் நேரம்
நான் உன் நினைவுக்கு வந்தால்
நான் சாதாரணமானவன். . .
எவருமே உனக்கில்லாத நிலையில்
நான் உன் நினனவிற்கு வருவேன்
நான் அசாதாரணமானவான். . .

Friday 25 November 2011

கண்ணீர் சுவடுகள்காதல் சென்ற
சுவடுகளைத் தேடிப்பார்த்தேன்
அங்கே கண்ணீர்த்துளிகளின்
தடையங்கள் மட்டுமே
மிஞ்சிக்கிடக்கின்றன. . .

Sunday 20 November 2011

முதல் வார்த்தை

நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
என்னிடம் பேசு. . .
இதுவரை உன் நினைவுகளால்
மட்டுமே நிரம்பிவழிந்த
என் மனது இன்று
உன் வார்த்தைகளாலும்
நிரம்பி வழியட்டும். . .

Tuesday 15 November 2011

உன்னைப் பிடிக்கும்

நீ எனக்கு
என்ன தண்டனை வேண்டுமானாலும்
கொடுத்துக்கொள். . .
உன்னை எனக்கு பிடிக்கும்
என்பதை - உன்னிடம்,
உன்னை எனக்குப் பிடிக்கும்
என்று சொல்வதைவிட
வேறு எப்படி என்னால்
சொல்ல முடியும். . .

Thursday 10 November 2011

எடுத்துச்செல்லடி. . .


உன் காலில் விழுவதே
பழகிப் போனது எனக்கு
உன் காலடியில் துடிக்கும்
என் இதயத்தை
என்றாவது எடுத்து விடலாம்
என்று முயற்சிக்கின்றேன். . .
இருந்தும் முடியவில்லை. . .

Saturday 5 November 2011

திறவாத கண்கள்

காலவரையற்ற வேலை நிருத்தம்
செய்கின்றன கண்கள். . .
இன்று உன்னைப் பற்றிய
கனவுகள் ஆதலால்
மூடியே கிடக்கின்றன அவைகள். . .
விடிந்தும் கூட திறவாமல். . .

Sunday 30 October 2011

அவளே உலகம்


காதலில் விழுந்த பின் இதயம் தான்
தொலைந்து போகும் என்பார்கள். . .
என்னவள் உடனிருக்கையில்
என்னைச் சுற்றிய உலகமே
தொலைந்து போய்விடுகின்றது
எனக்கு. . .

Tuesday 25 October 2011

காதல் காலம்அன்று காதலை எனக்குள்
கட்டவிழ்த்து விட்டவள் நீ. . .
இன்று அதை கட்டுப்படுத்த முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான். . .

Thursday 20 October 2011

காதலே வரம்


உன்னை காதலிப்பதையே வரம்
என நினைக்கின்றேன் நான். . .
கடவுளைத் தொழும் பக்தன் போல
காதலைத் தொழும் பித்தன் நான். . .

Sunday 16 October 2011

முடிவில்
கண்களை மூடி யோசித்துப் பார்
உன் நினைவுகளுக்குள்
நான் இல்லை என்றால். . .
என் மூச்சுக்காற்று கூட
உன் நுரையீரல் தீண்டாது. . .

Wednesday 12 October 2011

பிரம்மிப்பானவள் நீ

பிரம்மிப்பானவைகளைப் பார்த்தால்
ஒரு நிமிடம் மூச்சு நிற்குமாம்
உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
நான் மூச்சுவிடவே மறந்துவிடுவேனோ
என்ற பயம் எனக்கு. . .

Saturday 8 October 2011

என்றும் என் நினைவில்

என் இதயம் சுமந்தவளே
எனக்காய் அழுதவளே
இன்னல் பல இருந்தும்
என் எண்ணம் புரிஞ்சவளே. . .

மனசு கனக்குதடி
மதிகலங்கி சுத்துதடி
உசிரு துடிக்குதடி - தினம்
உன்னினைவாலே சாகுதடி. . .

மாய வலை விரிச்சு
மரகதமே உன்ன கொண்டுசெல்ல
ஒத்தக்கல்லு கோபுரமாய் நானும்
ஒடஞ்சு போய் நின்னேன்டி. . .

மனுசனா என்ன மாத்தியவளே
மனசுன்னா என்னானு காட்டியவளே
காலம் மாத்திப் போனாலும் - என்
காதல் மாறிப் போகாதடி. . .

Tuesday 4 October 2011

காதல் ஒளி

வெளிச்சம் தெரியா சாலையில்
நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு
என் தோல் மீது தலை
சாய்ந்து நடக்கையில்
எனக்குள் இருந்த பயம்
தொலைந்து போனதோ இல்லையோ. . .
அங்கே காதல் ஒளிர்ந்துவிட்டது. . .

Friday 30 September 2011

மறுபக்கம்
எனது மறுபக்கம்
தெரியுமா உனக்கு
என்று கேட்கின்றாய். . .
உனது முதல் பக்கத்தையே
முழுவதுமாய் படிக்காத
நான் எப்படி
உன் மறுபக்கத்தை
பற்றிச் சொல்லமுடியும். . .

Monday 26 September 2011

முட்டாள் பெண்னே

சின்னதொரு விஷயம் என்றாலும்
படபடத்துக்கொள்வாய் - அன்பே
உன் இதயத்துடிப்பின் வேகத்தை
என் இதயம் வலிப்பதிலிருந்தே
புரிந்துகொள்ளவேன். . .

Thursday 22 September 2011

புரிந்து"கொள்"ளடி

நீ எட்டி
உதைத்தாலும்
உன் கால்களையே
சுற்றிவரும்
ஒரு குட்டி நாயடி
என் காதல். . .

Sunday 18 September 2011

காதல் பரிசு

உன்னை என் மார்புமேல் படுக்கவைத்து
உன் தலை கோதி
உறக்கத்தின் தேவதையை பரிசாக
உனக்களிக்க ஆசை எனக்கு. . .
இப்படியான பல எதிர்பார்ப்புகளுடன்
நான் உறங்கக் கிடக்கையில்
என் உறக்கத்தின் தேவதையை
பரிசாய் எடுத்துக்கொண்டவள் நீ. . .
                                                      அன்பே அது தான் நீ
                                                      எனக்குத் தந்த காதல் பரிசு. . .

Wednesday 14 September 2011

உயிர்ச்சேதம்
கர்ப்பம் கலைந்துவிட்ட
பெண்ணாய் நான்
நீ என் காதலை
கைவிட்டபின். . .

Saturday 10 September 2011

காதல் மயக்கம்
தினமும் காலை ஒரு குவளை
மது அருந்துகின்றேன். . .
ஆம் அது
உன் இதழ் தொட்ட
தேநீர் . . .

Tuesday 6 September 2011

உனக்காக. . .

ஒரு நொடியில் ஒரு கவிதையும்
ஒரு நிமிடத்தில் ஒரு காவியமும்
படைத்திடுவேன் - அன்பே
நீ இல்லாத அந்த ஒரு நொடியும்
ஒரு நிமிடமும் - எனக்கு
பல யுகங்களை கொடுப்பதனால். . .

Friday 2 September 2011

சாபவிமோட்சனம்நீ உண்ட பிறகே
நான் உண்பேன்
உன் தட்டில். . .
மோட்சத்தை தவரவிட்ட
பருக்கைகளுக்கு
சாபவிமோட்சனம் கொடுக்க. . .

Monday 29 August 2011

மோட்சம்மஞ்சள் நிற தாவணியே
உன் மேனி
தொட்ட பிறகுதான்
மங்களகரமாய் மாறுகின்றது. . .

Thursday 25 August 2011

கண்கள் சொன்ன கவிதை


ஆயிரம் வார்த்தைகள் அழகாய்
உன் கண்கள் பேச
அவசர அவசரமாய்
அதை என் கண்கள் படிக்க
அத்தனையும் ஒரு கவிதை
அந்த அரை நொடிக்குள். . . .

Sunday 21 August 2011

புகைப்படம்உன்னிடம் எத்தனைமுறை தான்
என் காதலைச்சொல்வது
சரிதான் உந்தன் புகைப்படம்
மட்டும் என்ன பேசவாபோகின்றது. . .

Wednesday 17 August 2011

அழகே!


விண்மீங்களுக்கு இடையில்
உன்னைப் பார்த்தால்
ஒளிர்வது நீயா. . .?
இல்லை விண்மீங்களா. . .?
என்பதிலேயே பெருத்த
சந்தேகம் வந்துவிடுகின்றது
எனக்கு. . .

Saturday 13 August 2011

அதிசயம்


இமைகளுக்கு இடையில்
சுழலும் ஓர்
அதிசய உலகம். . .
உன் கண்கள். . .

Tuesday 9 August 2011

நீயே சொல்எத்தனையடி உயரத்திற்கடி
அணை கட்ட 
என் இதயத்தில் 
நிரம்பி வழிகின்றது 
உன் காதல். . .

Friday 5 August 2011

வானம் தொட்டுநீ கவிதை கேட்டால்
வார்த்தைகள் பத்தாதடி - தமிழில்
வானம்வரை நீண்டு விடுகின்றது
உன்னைப் பற்றிய கற்பனைகள் 
என்னுள். . .

Monday 1 August 2011

அட்சயப்பாத்திரம்


உனக்கு மட்டும் 
அட்சயப்பாத்திரம்
நான். . .
நீ என்ன கேட்டாலும் 
கிடைக்கும். . .
என் உயிரையும்
சேர்த்து. . .

Friday 29 July 2011

காதல் ஞானி

என்னைச் சுற்றி
ஒளி வட்டம் இருக்கின்றதா?
என்பது எனக்குத் தெரியாது. . .
என்னைச் சுற்றி
உன் நினைவுவட்டம் இருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு
நன்றாகத் தெரியும். . .

Tuesday 26 July 2011

கவலையில்லை

விண்மீங்கள் வீழ்வதைப் பார்த்தால்
மறதி ஏற்படுமாம். . .
உன்னை மட்டுமே
நினைவில் வைத்திருக்கும்
என் கண்முன்னே
ஒரு விண்மீன்
விழுந்தால் என்ன?
ஓராயிரம் விண்மீன்
விழுந்தால் என்ன?

Saturday 23 July 2011

கைவிட்டுவிட மாட்டாயே

24 மணி நேரமும்
உன்னைப் பற்றிய சிந்தனைதான்
நிகழ்காலத்தின் அத்துனை
நிமிடங்களிலும் நீயிருக்கும் போது
எதிர்காலத்தில் மட்டும்
எப்படி வேறு ஒருவர்
வந்துவிட முடியும். . .

Wednesday 20 July 2011

காலங்கள் கடந்துவிட்ட காதல்

காலங்கள் கடந்துவிட்ட
காதல், நம் காதல்
என்ற வாக்கியத்தை
வார்த்தைகள் மாற்றி
போற்றுவிட்டாயடி. . .
மறந்துவிடு என்றபின்
செத்துவிட்ட என்
நினைவுகளிலும்
துடித்துக் கொண்டிருக்கின்றதடி
நம் காதல். . .

Sunday 17 July 2011

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கி
இலையைத்தான் பார்த்திருக்கிறேன். . .

அன்பே உன்னில்தான்
தொட்டால் சிணுங்கும்
மலரை பார்க்கின்றேன். . .
நான் கடிந்து
பேசும்போது சுருங்கி
பின்பு அது
பொய்யென தெரிந்ததும்
மலர்வதை
உன் முகத்தில்தான்
பார்க்கின்றேன். . .

Thursday 14 July 2011

கண்டுகொண்டாய். . .

என் இதயத்திற்குள்
தான் எத்தனை
அறைகள். . .
ஒன்றிலாவது ஒழித்து
வைத்துவிடலாம் என்று
பார்க்கின்றேன். . .
என் காதலை
இருந்தும் முடியவில்லை. . .  

Monday 11 July 2011

என்றும். . .


உன்னைப் பற்றி
சிந்திக்காமல் என்னால்
இருக்க முடியாது. . .
என் இதயத்துடிப்பு
நின்று விட்ட
நாட்களில் கூட. . .
என் மரண ஓலம்
உனைப் பற்றிய
பாடல் பாடும். . .

Friday 8 July 2011

பூவே. . .


எத்தனை முறை
தொட்டுப் பார்ப்பது. . .
பூ தோற்று
போகின்றது உன்தன்
மென்மையில். . .

Tuesday 5 July 2011

S P B

நான் பாடுவது
பிடிக்காது - என்றாய்
S P B மேல் 
கோபம் வந்தது
எனக்கு. . .

Saturday 2 July 2011

பார்க்காதேஎன்னை கொள்ளாமல்
என் மனதை மட்டும்
காயப்படுத்திவிட்டு
போகிறதே. . .
உன் கண்களில்
இருந்து வரும்
மின்னல். . .

Thursday 30 June 2011

புவி நட்சத்திரம்`


நட்சத்திரங்களை நான்
காலையிலும் பார்க்கின்றேன்
அன்பே 
உன் கண்களில் தான்
எவ்வளவு வெளிச்சம். . .

Tuesday 28 June 2011

காதலன் ஆகிறேன்

நான் காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன். . .
கவிதை எழுதுவதால் அல்ல. . .
உன் கண்கள்
சொல்லும் வார்த்தைகளை
படிக்க கற்றுக்கொண்டதால். . .

Sunday 26 June 2011

அலையின் ஏக்கம்உன் பாதங்களை
தொட்டுச் செல்லும்
கடல் அலைகள்
கண்ணீர்விடுகின்றன. . .
இந்த மண்னைப் போல
உன் பாதங்களை
எப்பொழுதும் தழுவ
முடியவில்லையே என்று. . .

Friday 24 June 2011

எனக்கேசிரித்தும் கேட்டுவிடாதே
அழுதும் கேட்டுவிடாதே
அவள் அழகை. . .
நிலவே
அவளின் அனைத்தும்
எனக்கு மட்டுமே
சொந்தம். . .

Wednesday 22 June 2011

மறவாதே கண்மணியேநீ வாசல் காதவுகளை
மூடியதற்கே வழிமாறி
நடக்கின்றேன் நான். . .
தயவுசெய்து உன்
இதயக் கதவுகளையும்
இதைப்போல் மூடிவிடாதே
கல்லறையில் போய்
ஒழிந்துகொள்வேன் நான். . .  

Monday 20 June 2011

காதல் வீதிஎனக்குப் பிடித்தவற்றை
எல்லாம் கடையில்
வாங்கிவிடுகின்றேன். . .
காதலும் விற்பனை
பொருளாக இருந்திருந்தால்
நான் தற்கொலைக்கு
முயற்சி செய்திருக்கமாட்டேன். . .