Sunday 17 July, 2011

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கி
இலையைத்தான் பார்த்திருக்கிறேன். . .

அன்பே உன்னில்தான்
தொட்டால் சிணுங்கும்
மலரை பார்க்கின்றேன். . .
நான் கடிந்து
பேசும்போது சுருங்கி
பின்பு அது
பொய்யென தெரிந்ததும்
மலர்வதை
உன் முகத்தில்தான்
பார்க்கின்றேன். . .

7 comments:

Yaathoramani.blogspot.com said...

தொட்டால் சுருங்கி மலர்....
அற்புதமான கற்பனை
கற்பனையும் சொன்னவிதமும் அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் சகோ, தொட்டவுடன் வெட்கப்படும் பெண்மையினை, தொட்டால் சிணுங்கிக்கு ஒப்புவமையாக்கி அழகிய கவிதையாகத் தந்திருக்கிறீங்க.

தொட்டால் சிணுங்கி: நாணத்தின் மறு வடிவம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய காதல் கவிதை....

பிரணவன் said...

நான் கோபத்தில் இருக்கும் போது கூட. அவள் முகம் மலராகவே தெரிகின்றது எனக்கு. . .நன்றி ரமணி sir. . .

பிரணவன் said...

சகா பெண்மை எப்பவுமே மென்மை. . . நன்றி நிரூ

பிரணவன் said...

நன்றி சகா. . .

Anonymous said...

அருமை கவிதை ! வாழ்த்துக்கள் .