
கடவுளுக்கு பதிலாக
உன்னைத் தேர்ந்தெடுத்தேன்
என் மனச்சோகங்களை
உன்னிடம் பகிர்ந்துகொள்ள. . .
நீயும் இப்பொழுது
பேசமறுக்கிறாய் என்னிடம். . .
இருந்தபோதும் சொல்லி
அழுகிறேன் சோகங்களை. . .
கடவுளும் பேசுவதில்லை
நீயும் பேசுவதில்லை. . .
கதறி அழுகிறேன்
நான் மட்டும். . .
கைஉதறிவிட்டு போன
உன்னைத் தேடி. . .
6 comments:
பேசாதிருக்கும் காதலி
கடவுளைப் போலவே
வித்தியாசமான சிந்தனை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கடவுளும் காதலும் ஒன்றுதான் புரியாமல் இருப்பதினால்...
கவிதை அருமை...
காதலையும் கடவுளையும் உணரவே முடிகின்றது. . .கைகொள்ள முடிவதே இல்லை. . .வாழ்த்துரைக்கு நன்றி ரமனி sir. . .
காதல் வந்த பின் எதுவும் புரிவதில்லை. . .போன பிறகுதான், மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதே தெரிகின்றது. . .நன்றி சௌந்தர் sir. . .
#கதறி அழுகிறேன்
நான் மட்டும். . .
கைஉதறிவிட்டு போன
உன்னைத் தேடி. . .#
நல்ல கவிதை.
வாழ்த்துரைக்கு நன்றி முரளி நாராயண் sir. . .
Post a Comment